இலங்கையில் கோவிட் மரணங்கள் சடுதியாக உயர்வு!
இலங்கையில் மேலும் 42 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இலங்கையில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1608 ஆக உயிர்ந்துள்ளது.
மே 11ம் திகதி முதல் இன்று வரையில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்றைய தினம் மூன்று கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளது.
மே 11ம் திகதி முதல் ஜூன் 2ம் திகதி வரையில் 39 மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதன்படி, 11, 14, 15, 17 மற்றும் 20ம் திகதிகளில் தலா ஒருவரும், 23ம் திகதி இருவரும், 23, 24, 26, 28 மற்றும் 29ம் திகதிகளில் தலா ஒருவரும், 30ம் திகதி மூவரும், 31ம் திகதி 11 பேரும், ஜூன் 1ம் திகதி 11 பேரும், 2ம் திகதி மூவரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் 17 பெண்களும், 25 ஆண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை , இன்றைய தினம் 3,264 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 195,811 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
புனிதா சீரியலை தொடர்ந்து சன் டிவியில் முடிவுக்கு வரப்போகும் இன்னொரு சீரியல்... வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam
நான் சிவனேனு தானடா இருந்தேன்: நயன்தாரா 'நார்மல் people கிடையாது' ட்ரோல் பற்றி விக்னேஷ் சிவன் விளக்கம் Cineulagam