மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இருந்து தப்பி சென்ற கொரோனா தொற்றாளர் மடக்கி பிடிப்பு
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபரொருவர் இன்று மதியம் வைத்தியசாலையில் இருந்து தப்பிச்சென்ற நிலையில்,குறித்த நபர் பாதுகாப்பு தரப்பினரால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கொரோனா தொற்றாளர் ஒருவருக்கு உதவியாக அவரது மகன் குறித்த விடுதியில் தங்கி இருந்து உதவிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.
இந்த நிலையில், குறித்த உதவியாளரான மகனுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன்பரிசோதனையின் போது அவருக்கும் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டது.
குறித்த விடயத்தை அறிந்த உதவியாளரான மகன் இன்று மதியம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் தனிமைப்படுத்தல் விடுதியில் இருந்து தப்பிச்சென்றுள்ளார்.
துரித நடவடிக்கைகளை மேற்கொண்ட வைத்தியசாலை நிர்வாகம் பாதுகாப்பு தரப்பினரின் உதவியுடன் மன்னார் எழுத்தூர் பகுதியில் வைத்து மடக்கி பிடித்துள்ளனர்.
குறித்த நபரை சிகிச்சைக்காக உரிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 14 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
