பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு பிரிவில் பெண் அதிகாரிக்கும் கொரோனா!
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றி வருகின்ற பெண் பொலிஸ் அதிகாரிக்குக் கொரோனாத் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர் ஹல்துமு்ல – ஹால்அட்டுதென்ன பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று ஹல்துமுல்ல சுகாதார சேவைப் பணியகம் தெரிவித்துள்ளது.
குறித்த பெண் பொலிஸ் அதிகாரி நேற்று முன்தினம் வீடு திரும்பிய நிலையில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
அவரது அறிக்கை இன்று வெளியானது. அதற்கு முன் அவரது திருமண விவகாரங்களுக்காக ஹல்துமுல்ல பிரதேசத்தின் பல இடங்களுக்கும் சென்று வந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தநிலையில் கொரோனாத் தொற்று உறுதியாகியிருப்பதால் அவர் சிகிச்சை நிலையத்தில் சேர்க்கப்பட்டிருக்கின்றார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அரசியல் பிரிவு விவகார செயலாளர் ஒருவர் உட்பட அவர் சார்பில் பணியாற்றி வரும் இரண்டாவது நபருக்கு கொரோனாத் தொற்று உறுதியாகியிருக்கின்றது.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 14 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
