கொரோனா உறுதி செய்யப்பட்டும் வீட்டில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டாரவை இன்னமும் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய உறுப்பினர் தனது பேராதனை, கிரிபத்கும்புர பிரதேசத்தில் உள்ள வீட்டில் தனிமைப்பட்டுள்ளார். “நான் மிகவும் சிறந்த ஆரோக்கியத்துடன் உள்ளேன். என்னை தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு அழைத்து வரும் வரை பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.
நெருக்கடியான நிலைமை என்பதனால் தாமதம் ஏற்பட கூடும். அதனை புரிந்து கொண்டு அமைதியாக இருக்கின்றேன்” என நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
வசந்த யாப்பா பண்டாரவை சிகிச்சை நிலையத்திற்கு அழைத்து செல்வதற்கு தற்போதே நடவடிக்கை மேற்கொள்ள்பட்டு வருவதாக சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வசந்த யாப்பா பண்டாரவுக்கு நேற்றுமுன்தினம் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.