கொழும்பு உட்பட பல பகுதிகளில் வங்கி அதிகாரிகள் 55 பேருக்கு கொரோனா தொற்று
கொழும்பின் பல பகுதிகளிலுள்ள அரச வங்கிகளில் பயணியாற்றும் 55 அதிகாரிகளுக்கு கொரோனா தொற்றியுள்ளதாக உறுதியாகியுள்ளது.
கொழும்பு கோட்டை. நாரம்மல, கட்டுபொத்த ஆகிய பிரதேசங்களை சேர்ந்த வங்கி அதிகாரிகள் இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு கோட்டை பிரதேசத்தில் அரச வங்கி அதிகாரிகள் 300 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதேவேளை, கட்டுபொத்த மற்றும் நாரம்மல அரச வங்கிகள் இரண்டில் பணியாற்றும் 20 அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக நேற்று 2 வங்கிகள் மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கேகாலை இலங்கை வங்கியின் பிரதான வங்கி கிளை ஊழியர்கள் மூவரும் அவர்களில் ஒருவரின் மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அரசியல்வாதிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மறைத்துவைத்துள்ள கோடிக்கணக்கான பணம் - எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை
ஹோர்முஸ் நீரிணையில் செல்லும் கப்பல்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை - வீழ்த்தப்பட்ட 8 அமெரிக்க தளங்கள்