கோவிட் தொற்று மீண்டும் உச்சமடைய அரசின் அசமந்தப்போக்கே காரணம் - விஜித ஹேரத்
இலங்கையில் கோவிட் வைரஸ் தொற்று விவகாரத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு சரியான கவனம் செலுத்தத் தவறியதால் மீண்டும் தொற்று அதிகரித்துள்ளது என மக்கள் விடுதலை முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.
பி.சி.ஆர். பரிசோதனைகளை அரசு குறைத்திருந்தது எனவும், இதன் விளைவாக அடையாளம் காணப்படும் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியைக் காட்டியிருந்தது எனவும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டினார்.
சமீபத்திய பி.சி.ஆர். பரிசோதனை மூலம், கிராமப்புறங்கள் உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் கணிசமான எண்ணிக்கையிலான நோயாளிகள் அடையாளம் காணப்படுகின்றனர் எனவும் அவர் கூறினார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், கோவிட் வைரஸ் தொடர்பான இறப்புகளும் அதிகரித்து வருவதால் ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவும் எச்சரிக்கை விடுத்தார்.
கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டன என அரசு கூறியதாலேயே பொதுமக்களும் கோவிட் குறித்த அச்சத்தைத் தணித்து, நிதானமாகப் பயணிக்கத் தொடங்கினர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடியான சூழ்நிலையை இலகுவாக எடுத்துக்கொள்ள முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
