தீப்பற்றிக் கொண்ட கப்பலின் ஊழியர்களுள் ஒருவருக்கு கோவிட் தொற்று
கொழும்பு துறைமுகத்துக்கு அப்பால் கடலில் தீப்பற்றிக்கொண்ட கப்பலில் இருந்து நேற்று மீட்கப்பட்ட பணியாளர்களில் ஒருவருக்கு கோவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இவர் இந்திய பிரஜை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தீப்பற்றிக்கொண்ட கொள்கலன் கப்பலான ‘எக்ஸ்-பிரஸ் பேர்ல்’ இலிருந்து மீட்கப்பட்ட காயமடைந்த இரண்டு பணியாளர்களில் ஒருவருக்கே கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர் காயம் காரணமாக கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். கடந்த மே 20 ஆம் திகதியன்று இந்தியய - குஜராத்துக்கு நைட்ரிக் அமிலம் மற்றும் பிற இரசாயனங்களை எடுத்துச்சென்ற “எக்ஸ்-பிரஸ் பேர்ல்’ என்ற சரக்குக் கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டது.
இந்தக் கொள்கலன் கப்பல் பிலிப்பைன்ஸ், சீன, இந்திய மற்றும் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 25 பேர் கொண்ட குழுவினரால் வழிநடத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தீப்பற்றிக்கொண்ட கப்பலில் இருந்து 08 சரக்குக் கொள்கலன்கள் கடலில் வீழ்ந்துள்ளன.
இதனையடுத்து கொழும்பின் கரையை அடையும் மற்றும் கைவிடப்பட்ட கப்பலில் இருந்து நச்சு அல்லது நச்சுப் பொருட்கள் அல்லது பொதிகளைத் தொடவோ அல்லது திறக்கக்கூடாது என்று பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.