ஒரே பாடசாலையில் 15 மாணவர்களுக்கும் ஆசிரியருக்கும் கொரோனா தொற்று
நாவலப்பிட்டி, பஸ்பாகே பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவ, மாணவிகள் 15 பேருக்கும் ஆசிரியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டாம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை முடிவுகளுக்கயை இந்த தகவல் வெளியாகியுள்ளது. அதற்கமைய 14 - 16 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கும் ஆசிரியர் ஒருக்குமே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
குறித்த தொற்றாளர்களை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களுடன் நெருங்கி செயற்பட்டவர்களை தேடி தனிமைப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலையை மூடுவதா இல்லையா என்பது தொடர்பில் இன்று தீர்மானிக்கப்படும் என சுகாதார பரிசோதகர் மேலும் தெரிவித்துள்ளார்.





கடும் நிதி நெருக்கடிக்கு நடுவில்.., யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற காய்கறி வியாபாரியின் மகள் News Lankasri

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri
