நாடாளுமன்றத்தில் கடமையாற்றும் 10 பொலிஸாருக்கு கோவிட் தொற்று
நாடாளுமன்ற பொலிஸில் கடமையாற்றும் 10 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கடந்த 2 ஆம் திகதி முதல் இதுவரை கொரோனா தொற்றியுள்ளதாக பொலிஸ் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
இவர்களில் பெரும்பாலானோர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த போதே கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு நாடாளுமன்ற பொலிஸாரை சுகாதார பாதுகாப்பு முறையின் கீழ் கடமையில் ஈடுபடுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அத்துடன் விடுமுறையில் சென்றுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தி, அதன் முடிவுகளுக்கு அமைய மாத்திரம் நாடாளுமன்றத்தில் கடமையில் ஈடுபடுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா




