திருகோணமலையில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
திருகோணமலை பொது வைத்தியசாலை அலுவலகத்தில் கடமையாற்றும் மூவருக்கும், பிரபல தனியார் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு சென்ற இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்தியசுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இத்தகவலை இன்று (14) மாலை விடயத்துக்கு பொறுப்பான வைத்திய பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை பொது வைத்தியசாலை அலுவலகத்தில் முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றும் மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் மற்றுமொரு நபருக்கு செய்யப்பட்ட பரிசோதனையின் மூலம் தொற்று உறுதி செய்யப்படாததையடுத்து அவருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தொற்று உறுதி செய்யப்பட்ட நபரின் சகோதரர் ஒருவருக்கு அன்டிஜன் பரிசோதனை மூலம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கிண்ணியா - மாஞ்சோலை பகுதியிலிருந்து திருகோணமலை - உவர்மலை பகுதியில் இயங்கி வருகின்ற பிரபல தனியார் வைத்தியசாலைக்கு காய்ச்சல், இருமல் காரணமாக சிகிச்சை பெறச்சென்ற நபர் தொடர்பில் அங்கு கடமையாற்றி வரும் வைத்திய நிபுணர் வழங்கிய தகவலையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து இந்த நோயாளியை பார்வையிட வருகை தந்த நபருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது இவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் விடயத்துக்கு பொறுப்பான வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கடந்த டிசம்பர் 18ஆம் திகதி தொடக்கம் இன்று வரை திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் 103 பேரும், கிண்ணியாவில் 48 பேரும், மூதூர் பிரதேசத்தில் 42 பேரும், கந்தளாயில் 9 பேரும், கோமரங்கடவல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேரும், உப்புவெளி பிரதேசத்தில் ஏழு பேரும், தம்பலகாமத்தில் 6 பேரும், சேருவில சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மூன்று பேரும், குச்சவெளி பிரதேசத்தில் மூவரும்,குறிஞ்சாங்கேணி சுகாதார பிரிவில் இருவரும் இனங் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 264 பேர் இனங்காணப்பட்டுள்ள நிலையில் தனிமைப்படுத்தும் நிலையங்களில் பொலிஸார், கடற்படையினர் 33 பேர் அடங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam
