நாடாளுமன்றத்தில் கோவிட் தொற்று அதிகரிப்பு:112 ஊழியர்களுக்கு கொரோனா
நாடாளுமன்றத்தில் சில துறைகளின் பிரதான அதிகாரிகள் உட்பட 28 ஊழியர்களுக்கு கோவிட் தொற்றியுள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் பணிப்புரியும் 112 ஊழியர்கள் இன்று கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இவர்களில் 28 பேருக்கு கோவிட் தொற்றியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை நாடாளுமன்ற வளாகத்தில் இன்று முற்பகல் நடைபெற்றது.
கோவிட் தொற்றுக்கு உள்ளானதாக கண்டறியப்பட்டுள்ளவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் கடந்த சில வாரங்களில் மாத்திரம் நாடாளுமன்ற ஊழியர்களில் கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 98 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே இதுவரை கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 49 ஆகும். நாடாளுமன்றத்தில் கோவிட் தொற்று அதிகரித்து இருந்தாலும் அதன் பணிகளை வழமை போல் முனனெடுத்து வருவதாக நாடாளுமன்ற செயலாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் நாடாளுமன்றத்தில் தனியாக சுகாதார பாதுகாப்பு வேலைத்திட்டமும் கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதேவேளை நாடாளுமன்றத்திற்கு வெளி நபர்களை அழைப்பதும் குறைக்கப்பட்டுள்ளது.



