பாடசாலை வளாகத்தில் மயங்கி விழுந்த மாணவிக்கு கொரோனா தொற்று
தம்பே பகுதியில் உள்ள தேசிய பாடசாலையில் மாணவி ஒருவருக்கும் பாடசாலை ஊழியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அதன் பின்னர் மாணவிகள் உட்பட ஊழியர்கள் 30 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
நடைமுறை பரீட்சைக்கு அனுமதி பத்திரம் பெறுவதற்காக பாடசாலைக்கு வந்த மாணவி திடீரென மயங்கி விழுந்துள்ளார் என பாடசாலையின் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த மாணவி வீட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் அடையாளம் காணப்பட்டமையினால் ஏனையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.
அத்துடன் தனிமைப்படுத்தப்பட்டிருந்த வீட்டில் இருந்து கல்வி ஊழியர் ஒருவரும் பாடாலைக்கு வருகைத்தந்துள்ளளதாக தெரியவந்துள்ளது.
அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் குறித்த மாணவிக்கும் ஊழியருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
சுகாதார பிரிவின் ஆலோசனைக்கு குறித்த நபர்கள் தனிமைப்பத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.