மனிதர்கள் மீதான 'கொரோனா தாக்கம்'முடிவுக்கு வருகிறது
மனிதர்கள் மீதான கொரோனாவின் தாக்கம் முடிவுக்கு வருவதாக ரஸ்யாவின் நிபுணர் ஒருவர் கணித்துள்ளார்.
இது குறித்து ரஷிய தொற்றுநோயியல் நிபுணர் விலாடிஸ்லாவ் ஸெம்சுகோவ் (Vladislav Semsukov) தகவல் வழங்கியுள்ளார்.
மனிதர்கள் மீது கொரோனா வைரஸ் தாக்கம் முடிவை நெருங்கிக்கொண்டிருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வைரஸ், இயற்கையில் புதிய புகலிடத்தை தேடுகிறது என்றும் தன்னைக் கொல்லாத புதிய விலங்கை இந்த வைரஸ் கண்டால் அதன் உடம்புக்குள் சென்று தங்கியிருக்கும் என்றும் நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.
மனித சமூகத்தில் தடுப்பூசி போட்டவர்கள், மீண்டவர்கள் எண்ணிக்கை 70 முதல் 80 சதவீதத்தை எட்டும்போது, கொரோனா வைரஸ் இயற்கையில் ஏதாவது ஒரு விலங்கை புதிய புகலிடமாக சென்றடையும் என்று ரஷிய தொற்றுநோயியல் நிபுணர் விலாடிஸ்லாவ் ஸெம்சுகோவ் தெரிவித்துள்ளார்.
எனவே அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுவதில் உலக சுகாதார நிறுவனம் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
