திருகோணமலை பொது வைத்தியசாலை தாதியருக்கு கோவிட் தொற்று உறுதி
திருகோணமலை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் கடமையாற்றி வந்த தாதியருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று (02) மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனை மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் கோவிட் தொற்றாளர்களின் வீதம் அதிகரித்து வரும் நிலையில்,திருகோணமலை மாவட்டத்திலும் நாளுக்கு நாள் தொற்றாளர்களின் வீதம் அதிகரித்து வருகின்றது.

பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்குள் ஆறு பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,இன்றைய தினம் சிகிச்சை பிரிவில் கடமையாற்றி வந்த 26 வயதுடைய தாதியருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே வைத்தியசாலைக்கு வருபவர்கள் கட்டாயமாக முகக்கவசங்களை அணிந்து வருமாறும், சமூக
இடைவெளிகளை பேணுமாறும், மக்கள் நடமாடும் இடங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும்
திருகோணமலை சுகாதாரத் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனம் சொன்ன தெலுங்கு தயாரிப்பாளர்.. படம் எப்படி இருக்கு? Cineulagam
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri
வாடகைக்கு வீடு பார்க்க சென்ற தம்பதி: கடித்து குதறிய பிட்புல் நாய்: அதிர்ச்சியூட்டும் காட்சி News Lankasri