கோழி இறைச்சியை உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் சிலருக்கு கொரோனா
கம்பளை பிரதேசத்தில் இயங்கும் இலங்கையில் கோழி இறைச்சியை உற்பத்தி செய்யும் பிரதான நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்றியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்த கோழி இறைச்சி தொழிற்சாலையை மூன்று தினங்களுக்கு மூடி விட்டு, அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஊழியர்களுக்கு கொரோனா தொற்றி இருப்பது குறித்து வெளியில் கூற வேண்டாம் என நிறுவனத்தின் நிர்வாக அதிகாரிகள் ஊழியர்களிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கம்பளையில் உள்ள இந்த கோழி இறைச்சி தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் கோழி இறைச்சிகள் பொதி செய்யப்பட்டு, குளிரூட்டிகள் கொண்ட வாகனங்கள் மூலம் நாடு முழுவதும் உள்ள பிரதானமான ஆடம்பர அங்காடிகள் உட்பட வர்த்தக நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.