யாழில் பஸ் நடத்துநருக்குக் கொரோனா! - வடக்கில் இன்று 7 பேருக்குத் தொற்று உறுதி
யாழ். பஸ் நடத்துநர் உட்பட 7 பேருக்கு வடக்கு மாகாணத்தில் இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் நடத்துநர் கொரோனா அறிகுறிகளுடன் யாழ்.போதனா வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்குச் சென்றபோது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இதேவேளை, கிளிநொச்சியில் ஒருவருக்கும், வவுனியாவில் இருவருக்கும், மன்னாரில் கர்ப்பிணிப்பெண், ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் பெண் உட்பட மூவருக்கும் இன்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் கூறினார்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 18 மணி நேரம் முன்
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri