கராப்பிட்டிய வைத்தியசாலையின் புற்று நோயாளர் விடுதியில் மேலும் 6 பேருக்கு கொரோனா
காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் இலக்கம் 56 புற்று நோயாளர் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக காலி மாவட்ட தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் மருத்துவர் தெனுர கே.சிங்காராச்சி தெரிவித்துள்ளார்.
நோயாளிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட ரெப்பீட் என்டிஜன் பரிசோதனையில் இந்த கொரோனா தொற்றாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த கொரோனா தொற்றாளர்களில் 4 ஆண்கள் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையிலும், இரண்டு பெண்கள் கம்புறுப்பிட்டிய வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேவேளை புற்று நோயாளர் விடுதிக்கு வந்து சென்ற வஞ்சாவளை பிரதேசத்தை சேர்ந்த யுவதி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
கராப்பிட்டிய வைத்தியசாலையின் புற்று நோயாளர் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த மற்றும் அவர்களுக்கு உதவியாக இருந்த மூன்று பேர் உட்பட 23 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது எனவும் தெனுர கே.சிங்காராச்சி குறிப்பிட்டுள்ளார்.