வல்வை ஆதிகோயிலடியில் 48 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று
யாழ்.வடமராட்சி, வல்வெட்டித்துறையில் இன்று 39 பேர் உட்பட இரண்டு நாட்களில் 48 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை ஆதிகோயிலடி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் எழுமாற்றாக 156 பேரிடம் இன்று பி.சி.ஆர். மாதிரிகள் பெறப்பட்டன. அவர்களில் 29 பேருக்குத் தொற்றுள்ளமை கண்டறிப்பட்டுள்ளது.
மேலும் 32 பேரிடம் இன்று முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 9 பேருக்குத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை ஆதிகோயிலடியைச் சேர்ந்த ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு இன்று சென்று பி.சி.ஆர். பரிசோதனையை முன்னெடுத்துள்ளார். அவருக்கும் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், நேற்று 9 பேருக்குத் தொற்றுள்ளமை பி.சி.ஆர். பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
லொட்டரியில் விழுந்த ரூ.8,700 கோடி ஜாக்பாட் - ஒரு மாதம் கழித்து பரிசை வாங்கிய வெற்றியாளர் News Lankasri
அட்டகத்தி தினேஷின் காதலி இவர்தானா? ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய பிரபல தொகுப்பாளினியின் பதிவு! Manithan
இனி நாங்கதான் நார்மல்.. எல்லாரும் தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க: டோரதி சர்ச்சைக்கு கார்த்திக் சுப்புராஜ் பதில் Cineulagam