வவுனியாவில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
வவுனியாவில் 15 பேருக்கு நேற்றையதினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
வவுனியா பட்டாணிசூர் பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் வவுனியா நகர வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களிற்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் அதன் ஒருபகுதி முடிவுகள் நேற்று வெளியாகியிருந்தன.
அதனடிப்படையில் வவுனியாவின் நகரப்பகுதிகளில் உள்ள வியாபார நிலையங்களில் பணியாற்றும் தனிமைப்படுத்தப்பட்ட 12 பேருக்கு தொற்று இருக்கின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று அடையாளம் காணப்பட்ட நபர்களுடன் வவுனியாவில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை கடந்த பத்து நாட்களில் 287ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அருண் விஜய் முதல் சாய் அபயங்கார் வரை.. விஜய்யின் TVKவுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்த நட்சத்திரங்கள் லிஸ்ட் Cineulagam
பீகார் சென்ற அய்யனார் துணை குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த சந்தா அப்பா... புதிய பரபரப்பான புரொமோ Cineulagam