இலங்கையில் கோவிட் பரவல் உச்சத்தில் - இலங்கை மருத்துவச் சங்கம்
இலங்கையில் கோவிட் 19 தொற்று நோய் நிலைமையானது உச்சத்திற்கு வந்துள்ளதாக இலங்கை மருத்துவச் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால், மற்றுமொரு கோவிட் அலை ஏற்பட்டதாக அதனை எதிர்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும் எனவும் அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிலைமையில், பயணக் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக அமுல்படுத்த வேண்டும் என இலங்கை மருத்துவச் சங்கத்தின் தலைவர விசேட மருத்துவ நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.
மக்கள் நடந்துக்கொள்ளும் விதத்தை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத மட்டத்தில் இருப்பது இந்த நிலைமைக்கு காரணம்.
இப்படியான சூழ்நிலையில் மீண்டும் நாட்டை திறந்தால், மிக வேகமாக நோய் பரவலாம். மற்றுமொரு கோவிட் அலை ஏற்பட வாய்ப்புள்ளது.
அப்படி நடந்தால், நிலைமை மிகவும் மோசமாக மாறும். கடந்த தினத்தில் இலங்கையில் 2 ஆயிரத்து 284 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
மரணங்களும் இன்னும் குறைந்தபாடில்லை. இலங்கையில் ஏற்பட்ட மொத்த கோவிட் மரணங்களில் மூன்றில் ஒரு பகுதி கடந்த இரண்டு வாரங்களுக்குள் ஏற்பட்டுள்ளது எனவும் பத்மா குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன் ஜனாதிபதி மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மோசமாக விமர்சித்துள்ள எலான் மஸ்க் News Lankasri

விஜய் டிவியை தொடர்ந்து வேறொரு தொலைக்காட்சியின் சீரியலில் கமிட்டாகியுள்ள நடிகை ஷோபனா.. முழு விவரம் Cineulagam

மாஸ் வரவேற்பு பெற்றுள்ள டிராகன் படத்திற்காக பிரதீப் வாங்கிய சம்பளம்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
