மந்திகை வைத்தியசாலையிலும் கோவிட் சடலங்கள் தேக்கம்!

Death Corona virus Covid 19 Jaffna
By Rakesh Sep 10, 2021 03:42 PM GMT
Report

பருத்தித்துறை (மந்திகை) ஆதார வைத்தியசாலை பிரேத அறையில் கோவிட்  மரணமடைந்தவர்களின் சடலங்களைக் குளிரூட்டியில் வைத்துப் பேண முடியாத நிலையில் சடலங்கள் தேங்கிக் காணப்படுவதால் பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளோம் என பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை பதில் பணிப்பாளர் வே.கமலநாதன் தெரிவித்தார்.

வைத்தியசாலையில் இன்று ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ,

"எமது வைத்தியசாலையில் கடந்த மே மாதம் 17ஆம் திகதி கோவிட் நோயாளர் விடுதி ஆரம்பிக்கப்பட்ட பின்னர் 556 பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுள்ளனர்.

அவர்களில் 21 பேர் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 20 பேர் வெளிநோயாளர் பிரிவில் உயிரிழந்துள்ளனர்.

கோவிட் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் உயிரிழந்தவர்களின் சடலங்களை மின் தகனம் செய்வதற்கு உள்ள நெருக்கடி நிலைமைகள் காரணமாக வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலங்கள் தேங்கி காணப்பட்டுகின்றன. பிரேத அறையில் 6 சடலங்களையே குளிரூட்டியில் வைத்துப் பாதுகாக்க கூடிய வசதிகள் உள்ள நிலையில் இன்றைய நிலவரப்படி 11 சடலங்கள் காணப்படுகின்றன.

எதிர்வரும் நாட்களில் மரணங்கள் ஏற்பட்டால் சடலங்களைப் பாதுகாப்பதில் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். யாழில் ஒரு மின் தகன மயானமே உள்ளது. அதிலையே யாழ். மாவட்டத்தில் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழப்பவர்களின் சடலங்கள் எரியூட்டப்பட்டு வருவதனாலையே சடலங்களை எரியூட்டுவதில் தாமதங்கள் ஏற்படுகின்றன.

தாமதங்களைக் கருத்தில்கொண்டு வெளி மாகாணத்தில் உள்ள மின் தகன மயானங்களுக்கு சடலங்களை கொண்டு சென்று எரியூட்டுவதற்கு உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சம்மதம் தெரிவிக்கின்றனர் இல்லை.

அதேவேளை, தியாகி அறக்கொடை நிறுவன ஸ்தாபகர், வெளிமாகாணங்களில் சடலங்களைத் தகனம் செய்வதற்கு உறவினர்கள் சம்மதம் தெரிவித்தால் அதற்கான போக்குவரத்து செலவுகள் உள்ளிட்டவற்றைத் தாம் பொறுப்பேற்பதாக முன்வந்துள்ளார்.

அதேவேளை, உயிரிழந்தவர் வறுமைக்கோட்டுக்கு உட்பட்டவர் எனில் மின் தகன செலவு உள்ளடங்கலாக அனைத்து செலவுகளையும் தாம் பொறுப்பேற்பதாகவும் தெரிவித்துள்ளார். அவற்றை நாம் நோயாளர் நலம்புரி சங்கத்தின் ஊடாக முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

அதேவேளை, வீட்டில் உயிரிழந்தவர்களுக்குக் கொரோனோத் தொற்று உறுதியானால் உறவினர்கள் வைத்தியசாலைக்கு அறிவித்தால் அது தொடர்பான நடவடிக்கைகளையும் வைத்தியசாலை பொறுப்பெடுக்கும். அவர்கள் வசதி குறைந்தவர்கள் எனில் நோயாளர் நலன்புரி சங்கத்தின் ஊடாக , தியாகி அறக்கொடையைத் தொடர்புகொள்ள முடியும். அவர்கள் அனைத்து செலவீனங்களைப் பொறுப்பேற்றுக்கொள்வார்கள்.

எனவே, மக்கள் தமக்குச் சளி, தடிமன் , காய்ச்சல் உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் பயமின்றி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் வைத்திய தேவைகள் உள்ளிட்ட தேவைகளுக்கு வைத்தியசாலையின் பொது தொலைபேசி இலக்கங்களான 0212263261 மற்றும் 0212263262 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்புகொள்ள முடியும் என குறிப்பிட்டு்ளார். 

1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், திருநெல்வேலி, Zürich, Switzerland

04 Feb, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

இலுப்பைக்கடவை

25 Jan, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

25 Jan, 2021
மரண அறிவித்தல்

யாழ் தலையாழி, Jaffna, Saint-Ouen-l'Aumône, France

19 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், வவுனியா

26 Jan, 2020
மரண அறிவித்தல்

நவிண்டில், Toronto, Canada

22 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், மாவிட்டபுரம், கிளிநொச்சி, Toronto, Canada

26 Dec, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொக்குவில், வட்டக்கச்சி, Gagny, France

21 Jan, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொழும்பு, India, Toronto, Canada

25 Dec, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, ஆனைக்கோட்டை, London, United Kingdom

21 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கல்லடி, Wales, United Kingdom

23 Jan, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், kilinochchi

06 Feb, 2006
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pinner, United Kingdom

17 Jan, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு, Ottawa, Canada, Markham, Canada

27 Dec, 2025
மரண அறிவித்தல்

தொல்புரம், Drancy, France

18 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை மாரீசன்கூடல், சாவகச்சேரி, சுவிஸ், Switzerland

23 Jan, 2013
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கரைச்சிக்குடியிருப்பு, Brampton, Canada

20 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, கோண்டாவில்

25 Dec, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

20 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, Sangarathai, மானிப்பாய், நெதர்லாந்து, Netherlands, ஜேர்மனி, Germany

23 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், முரசுமோட்டை, சுவிஸ், Switzerland

21 Jan, 2021
மரண அறிவித்தல்

மண்டைத்தீவு 5ம் வட்டாரம், கொழும்பு, Toronto, Canada

17 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US