வவுனியாவில் இராணுவ வீரர் ஒருவருக்கு கொரோனா உறுதி
வவுனியா - செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இராணுவ வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த இராணுவ வீரர் காலி, பலப்பிட்டியவில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு விடுமுறையில் சென்றுவிட்டு கடந்த 31ஆம் திகதி மெனிக்பாம் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமிற்கு கடமைக்கு திரும்பியிருந்தார்.
இதன்போது அவர் தனிமைப்படுத்தலிற்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அவருக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டமையல் செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டு யாழ். வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
பரிசோதனை முடிவுகளின் பிரகாரம் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து அவர் கொழும்பு இராணுவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam