திறைசேரியின் மின்னஞ்சல் சேமிப்பு தொகுதி (Email Server) ஆபத்தான நிலையில்! கோப் (COPF) குழுவில் அம்பலமான இரகசியம்...
திறைசேரியின் அனைத்து இரகசிய மற்றும் முக்கியமான அரச தகவல்கள் பரிமாறப்படும் மின்னஞ்சல் சேமிப்பு தொகுதி (Email Server), எந்தவொரு பராமரிப்பும் அல்லது பாதுகாப்பு புதுப்பித்தலும் (Update) இன்றி 2019ஆம் ஆண்டிலிருந்து முற்றிலும் பாதுகாப்பற்ற முறையில் பேணப்பட்டு வந்துள்ளமை அரசாங்க நிதி பற்றிய குழுவின் (COPF) அண்மைய கூட்டத்தில் தெரியவந்துள்ளது.
2.5 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடனைச் செலுத்துவதில் இடம்பெற்ற பெருமளவிலான நிதி மோசடி குறித்து விசாரணை செய்வதற்காகக் கூட்டப்பட்ட விசேட குழு அமர்வின் போது,
அதன் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா மற்றும் அங்கு வருகை தந்திருந்த அதிகாரிகளுக்கு இடையே நடைபெற்ற நீண்ட விசாரணைக்கு மத்தியில், நாட்டின் சைபர் பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள பெரும் வீழ்ச்சி இவ்வாறு வெளிச்சத்திற்கு வந்தது.
கைதியின் கோரிக்கையால் ஏற்பட்ட விபரீதம்! மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்படும் சிசிடிவி காட்சிகள்
மிகவும் பழமையான அமைப்பு
இங்கு குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்த இலங்கை கணினி அவசர தயார்நிலை அமைப்பின் (CERT) அதிகாரிகள், திறைசேரியினால் தற்போது கூட பயன்படுத்தப்பட்டு வருவது 2016ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட ஒரு அமைப்பாகும் (Server system) என்பதை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
அதன் உத்தியோகபூர்வ சேவைக்காலம் 2019ஆம் ஆண்டுடன் நிறைவடைந்துள்ளதுடன், அன்றிலிருந்து இன்றுவரை அதற்காக எவ்வித பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், வருடாந்த பாதுகாப்பு தணிக்கை (Annual Security Audit) எதுவும் செய்யப்படவில்லை என்றும் நிதிக்குழுவின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளனர்.

2019 ஆம் ஆண்டுடன் காலாவதியான இந்த அமைப்பை எந்தவொரு சேவைப் பராமரிப்போ (service) அல்லது இக்காலப்பகுதிக்குரிய புதுப்பித்தலோ (update) இல்லாத ஒரு சேவையகத்தின் (server) மூலமாகவே திறைசேரியின் இந்த அனைத்து இரகசிய ஆவணங்களும் அனுப்பப்பட்டன? யார் வேண்டுமானாலும் மிக எளிதாக ஊடுருவக்கூடியதாகவும் இருந்துள்ளது.
கொடுக்கல் வாங்கல்களில் பணச் சலவை (Money laundering) அபாயம் இருப்பதாக அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கி (Federal Reserve Bank), சிட்டி வங்கி (Citi Bank) என்பன இலங்கை மத்திய வங்கி ஊடாக திறைசேரிக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்தமை இக்குழுவில் வெளிப்பட்டது.
எனினும், திறைசேரியின் கீழ்மட்ட அதிகாரிகளினால் அந்த பாரதூரமான எச்சரிக்கைகள் குறித்து உயர் நிர்வாகத்திற்கோ அல்லது நிதிச் செயலாளருக்கோ அறிக்கை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதும் குழுவின் முன்னிலையில் தெரிவிக்கப்பட்டது.
அதிகாரிகளினால் இப்பிரச்சினை குறித்து உயர் மட்டத்திற்கு அறிக்கை செய்யப்படாமல், தங்களது மட்டத்திலேயே தீர்மானங்களை மேற்கொண்டு, மீண்டும் ஒருமுறை அந்த மோசடியான கணக்குகளுக்கே பணத்தை அனுப்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என நிதி அமைச்சின் செயலாளர் குழுவின் முன்னிலையில் தெரிவித்திருந்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் எப்போதும் போருக்கு அஞ்சியதில்லை! முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்ட சில கருத்துக்கள்....
ஹார்முஸ் நீரிணையில் ட்ரம்ப் அறிவித்த 20 சதவீத கட்டணம்., உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதிரடி மாற்றம் News Lankasri
ஜெயிலர் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா.. விஜய்யை தொடர்ந்து ரஜினி செய்யப்போகும் பிரம்மாண்ட விஷயம் Cineulagam
சிவபெருமானின் அருள் பொழியும் ஸ்ராவண மாதம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே அதிர்ஷ்டத்தால் நிறையும்! Manithan