யாழில் இலஞ்சம் வாங்கிய பொலிஸ் அதிகாரியின் மகன்: நீதிமன்றில் முற்படுத்துமாறு உத்தரவு
குற்றச்செயல்களில் ஈடுபட்ட நபர்களை சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்றி விடுவதாக கூறி பணம் பெற்று வந்த பொலிஸ் உயர் அதிகாரியின் மகனை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு, யாழ். நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு கட்டளையிட்டுள்ளது.
யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிவரின் மகன், பொலிஸ்நிலையங்களுடன் வழக்குகளை முடிப்பதாக கூறி பணம் பெற்று வந்தமை தொடர்பில் யாழ் . மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றன.
பொலிஸாருக்கு கட்டளை
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வந்த நிலையில், மகன் தலைமறைவாகி உள்ளார்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் யாழ் நீதவான் நீதிமன்றில் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்த நிலையில், சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்துமாறு மன்று பொலிஸாருக்கு கட்டளையிட்டுள்ளது.
அதேவேளை சந்தேக நபரின் தந்தையான பொலிஸ் அதிகாரி முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்கு இடமாற்றபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல நடிகர், கொஞ்ச நாள் தான் இருப்பேன்.. விஜய்க்கு வைத்த கோரிக்கை Cineulagam

குட் பேட் அக்லி படத்தின் முதல் காட்சி எப்போது தெரியுமா.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் Cineulagam

டாக்டராக இருந்து ஐஏஎஸ் அதிகாரியான பெண்.., 7 ஆண்டுகளுக்கு பிறகு ராஜினாமா செய்து தற்போது செய்யும் வேலை? News Lankasri
