ரணிலுக்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: சம்பிக்க வேண்டுகோள்
நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்கும் விடயங்களில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவும் பொருளாதார நெருக்கடியும்

"இதற்கு முன்னரும் 2001ஆம் ஆண்டில் நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டபோது ரணில் விக்ரமசிங்கவால் அதனை வெற்றிகொள்ள முடிந்தது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியையும் அவர் தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கை காணப்படுகின்றது.
அதற்கு அனைவரும் பிரதமர் ரணிலுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இன்னும் இரண்டு மாதங்களுக்குள் இந்த நெருக்கடிகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால் நாடு முழுவதும் பாரிய
எதிர்ப்பு வெடிக்கும்" என்றும் எச்சரித்துள்ளார்.
சூர்யாவின் திரை வாழ்க்கையில் இதுவரை நடக்காத விஷயம்.. தமிழக வசூலில் கருப்பு திரைப்படம் ருத்ரதாண்டவம் Cineulagam
பிரித்தானியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் இந்தியர்கள்: UK நாடாளுமன்ற உறுப்பினர் சர்ச்சை கருத்து News Lankasri