கிளிநொச்சி மற்றும் முல்லைதீவில் நீண்ட நாட்களின் பின் சமையல் எரிவாயு விநியோகம்(Photos)
கிளிநொச்சியில் நீண்ட நாட்களின் பின் எரிவாயு விநியோகம் இடம்பெற்றுள்ளது.
லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களே இன்று(14) விநியோகிக்கப்பட்டுள்ளது.
600க்கும் மேற்பட்ட மக்களுக்கு விநியோகம்
கடந்த இரண்டு மாதங்களுக்கு பின்னர் சமையல் எரிவாயு சிலிண்டர்களானது கிளிநொச்சிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
அத்துடன் கொண்டுவரப்பட்ட சிலிண்டர்களானது விநியோகஸ்தர் காரியாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.
சுமார் 600க்கும் மேற்பட்ட மக்களுக்கு சமையல் எரிவாயு விநியோகம் நடைபெற்றுள்ளது.
பொதுமக்கள் எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொள்ள அதிகாலை வேளையிலிருந்து வரிசையில் காத்து நின்றுள்ளனர்.
பின்னர், நீண்ட நேர வரிசையில் காத்திருந்து எரிவாயுவினை பெற்று சென்றுள்ளனர்.
சிரமத்தை எதிர்நோக்கியுள்ள மக்கள்
எனினும், எரிபொருள் பற்றாக்குறையினால் எரிவாயுவினை பெறுதலிலும், பெற்ற எரிவாயுவினை கொண்டு செல்வதிலும் மக்கள் பெரும் சிரமத்தினை எதிர்நோக்கியுள்ளனர்.
முல்லைத்தீவு
முல்லைத்தீவில் நீண்ட நாட்களின் பின் எரிவாயு வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எரிவாயுக்களை தாங்கிய ஊர்தி ஒன்றின் மூலமே இன்று(14) மக்களுக்கு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
சமளவில் எரிவாயு பகிர்ந்தளிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு என இன்று 648 எரிவாயு சிலிண்டர்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இவை அரச உத்தியோகத்தர்களுக்கும் மக்களுக்கும் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, முல்லைத்தீவு நகர மாவட்ட செயலகத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கு 248 எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு பொது விளையாட்டு மைதானத்தில் 400 எரிவாயு சிலிண்டர்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
குடும்ப அட்டையின் படி விநியோகம்
முல்லைத்தீவு நகரை அண்டிய மக்களுக்கு குடும்ப அட்டையின்படி ஒன்று வீதம் இந்த எரிவாயு விநியோகம் இடம்பெற்றுள்ளது.