நாடு முழுவதும் மீண்டும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு
லாஃப் மற்றும் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களுக்கு நாடு முழுவதும் சந்தையில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இரண்டு வகை சமையல் எரிவாயுகளில் ஒன்றை கூட கொள்வனவு செய்ய முடியாது நுகர்வோரும் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
டொலர் தட்டுப்பாடு காரணமாக எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக லாஃப் கேஸ் நிறுவனத்தின் தலைவர் டப்ளியூ.கே.எச். வேகப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
எனினும் தினமும் 300 முதல் 400 தொன் எரிவாயு சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
வங்கிகளில் டொலர் கிடைக்காததால், எரிவாயுவை இறக்குமதி செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. கடன் பத்திரங்களை பெற வங்கிகளை வணங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் வேகப்பிட்டிய குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் தமது நிறுவனம் வழமை போல் எரிவாயு விநியோகத்தை முன்னெடுத்து வருவதாகவும் லாஃப் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், லிட்ரோ எரிவாயுவின் கேள்வி அதிகரித்துள்ளது எனவும் லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
வயது உண்மை தெரிந்ததும் சரவணன் எடுத்த அதிரடி முடிவு, கதறி புலம்பும் மயிலு... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam