சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு: நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பு(Video)
சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக் கொள்வதற்காக மட்டக்களப்பு காத்தான்குடியில் இன்று(5) மக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றதைக் காணமுடிந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சமையல் எரிவாயு (லீற்றோ) தட்டுப்பாடு காரணமாக பொது மக்கள் பலத்த சிரமங்களை எதிர் நோக்கியுள்ளனர்.
சமையல் எரிவாயு சிலிண்டரை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இன்று காலை நீண்ட வரிசையில் மக்கள் காத்து நின்றனர்.
லீற்றோ சமையல் எரிவாயு மட்டக்களப்பு மாவட்ட ஏக வினியோகஸ்தர்களான எஸ்.எஸ்.எம்.சொல்கார் நிறுவனத்தினருக்கு இன்று காலை கொழும்பிலிருந்து வந்த லீற்றோ சமையல் எரிவாயுவை காத்தான்குடி கடற்கரை வீதியோரமாக வைத்து பொது மக்களுக்கு விநியோகம் செய்தனர்.
இதன் போது பொதுமக்கள் சமையல் எரிவாயு வெற்று சிலிண்டர்களுடன் அங்கு வருகை தந்து வரிசையில் நின்று பெற்றுச் சென்றதைக் காணக்கூடியதாக இருந்தது.
சமையல்
எரிவாயு தட்டுப்பாட்டினால் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு போதுமானளவு சமையல்
எரிவாயு வராததால் இந்த நிலைமை காணப்படுகின்றது.









Quartersகு செல்வதாக செந்தில் கூறிய விஷயம், பாண்டியனின் ஷாக்கிங் பதில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam

அவர் பிரதமரானால் நான் இந்தியாவுக்குச் சென்றுவிடுவேன்... கூறும் தொலைக்காட்சி பிரபலம்: யார் அந்தப் பெண்? News Lankasri
