விவசாயி ஒருவரின் மாறுபட்ட போராட்டத்தால் சர்ச்சை
மணலாற்றில் விவசாய சங்க அமைப்பினர் மீது மலம் கழித்து தாக்குதல் நடத்தியமையினால் பரபரப்பு நிலை ஏற்பட்டது.
வெலிஓயா ஹலபட பிரதேசத்தில் விவசாய அமைப்புகளுடனான கூட்டம் நடைபெற்றது. இதன்போது அதிகாரிகளுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயி ஒருவர் ஸ்தலத்திலேயே மலம் கழித்துள்ளதுடன் அதிகாரிகளை மலத்தால் தாக்கியுள்ளார்.
கடந்த பருவத்தில் பயிர் சேதத்துக்கு நட்டஈடு வழங்குவதில் சில விவசாய சங்க அதிகாரிகள் மற்றும் சில அரச அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபட்டதாக விவசாயிகள் குற்றம் சுமத்தியதினர்.
இந்தப் பிரச்சனை பெரிதாக சென்றதையடுத்து வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து மலத் தாக்குதல் நடந்துள்ளது. இங்கு ஆத்திரமடைந்த விவசாயி ஒருவர் சம்பவ இடத்திலேயே மலம் கழித்ததோடு, மலத்தை கையில் எடுத்துக்கொண்டு விவசாய அமைப்பின் தலைவரை தாக்கியுள்ளார்.
இது தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.