FBI-ஐ விமர்சித்த ட்ரம்ப்! ரணில் கூறிய உளவுத்துறை அறிக்கையில் சந்தேகம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த FBI இன் கண்டுபிடிப்புகளை நிராகரிப்பது டொனால்ட் ட்ரம்பை கோபப்படுத்தக்கூடும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்த கருத்தானது அமெரிக்காவுடனான ரணிலின் உறவுகள் எவ்வாறானது என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.
ஒரு தொலைபேசி உரையாடலில் இலங்கையின் மீதான அமெரிக்க வரிகளை நிறுத்த முடியும் என ரணில் கூறியிருந்ததும், தற்போது FBI இன் கண்டுபிடிப்புகள் குறித்து அரசாங்கத்தை எச்சரிப்பதும் ரணில் - அமெரிக்க உறவுகளின் நிலைபாடுகளை எடுத்துகாட்டுகிறது.
இராஜதந்திர தாக்கத்தின் அமெரிக்காவின் நிலைபாடுகள் இலங்கை மீது அண்மைய காலங்களில் அதிகரித்த வருகிறது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
அந்த வகையில் தற்போது ரணில் கூறியதை போல உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து அமெரிக்காவின் பார்வை இலங்கையை விட்டு விலகவில்லையா என்ற கேள்வி எழுகிறது.
அவ்வாறு இல்லை என்றால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ரணிலால் அமெரிக்காவுக்கு விடுத்த அழைப்பாக கூட இந்த கருத்துக்களை அமைந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது.
270ற்கும் மேற்பட்ட அப்பாவி மக்களைக் கொன்ற இந்த தாக்குதல் இன்றுவரை பல சந்தேகங்களையும், திருப்பங்களையும் கொண்டுள்ளது.
சஹ்ரான் ஹாஷிம் தான் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டார் என்பதை FBI கூறியதாக ரணில் சுட்டிக்காட்டியிருந்தார். இந்த அறிக்கையை புறக்கணித்தால் ட்ரம்பின் கோபத்துக்கு ஆளாக கூடும் எனவும் கூறினார்.
ஆனால் அண்மையில் டொனால்ட் ட்ரம்ப் FBI-ஐ மீண்டும் பகிரங்கமாக விமர்சித்துள்ளார். FBI நடவடிக்கைகள் குறித்து கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.
உளவுத்துறை அறிக்கை
FBI இயக்குனர் கிறிஸ்டோபர் ரேவை விசுவாசமற்றவர் என்று ட்ரம்ப் முத்திரை குத்தினார். பல விசாரணைகளில் பணியகம் தனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சோடித்ததாகக் கூட அவர் மறைமுகமாகக் கூறியிருந்தார்.
எனவே, முக்கிய சர்வதேச உளவு அமைப்பான FBI-யை நம்பாத ட்ரம்ப், இலங்கை மீதான தாக்குதல் அறிக்கையைப் பற்றியும் அதன் தாக்கம் தொடர்பிலும் கேள்வி எழுப்புவாரா? என என்ன தோன்றுகிறது.
பல உளவுத்துறை அறிக்கைகள், சாட்சியங்கள் மற்றும் புலனாய்வு பத்திரிகைகளால் தாக்குதல்தாரிகள் கண்காணிக்கப்பட்டனர் , பின்தொடரப்பட்டனர், சில சந்தர்ப்பங்களில், அவர்கள் தாக்குதலை மேற்கொள்ளும் தருணம் வரை பாதுகாக்கப்பட்டனர் என்பதைக் குறிக்கிறது.
சில அறிக்கைகள், இராணுவ உளவுத்துறையினர் குழுவிற்குள் இரகசியங்களை பதித்துள்ளதாகவும் , தாக்குதல்களை நிறுத்துவதற்குப் பதிலாக, அவர்களைத் தொடர அனுமதித்ததாகவும், ராஜபக்ச குடும்பத்திற்கு சார்பாக செயற்பட்டதாகவும் குற்றம் சாட்டுகின்றன.
எனினும் ரணில் இவற்றை தான்டி FBI அறிக்கையே நியாயபூர்வமானது, விசாரிக்கப்பட்வேண்டியது என ஆணித்தனமாக கூறுகின்றார்.
அரசியல் நோக்கம்
உண்மையில், இந்த அறிக்கை சிறியதாகவும்(பல்வேறு விடயங்கள் உள்ளடக்கப்பட்வில்லை என்ற கருத்து), அவசரமாக தொகுக்கப்பட்டதாகவும் , அரசியல் நோக்கங்களுடன் இலங்கை வட்டாரங்களால் வழங்கப்பட்ட ஒன்று என விமர்சணங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்நிலையில் ட்ரம்பை அழைப்பதன் மூலம், ரணில் அரசியலில் தனக்கான பெயரை சர்வதேசத்திற்கு மீண்டும் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு எனவும் விமர்சிக்கப்படுகிறது.
இலங்கை அரசாங்கத்தை பொறுத்தவரை ஒரு நிலையற்ற FBI ஆவணத்தை பற்றி ரணில் விக்கிரமசிங்க பேசுவது அரசியல் நிலையற்ற தன்மை என்று கூறப்படுகிறது.
இந்த நீதிகோரலானது கிட்டத்தட்ட 300 ஆன்மாக்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்கும் செயற்பாடு
ரணில் கூறியதைபோல FBI ஆவணம் உண்மைகளை உலகுக்கு வெளிக்கொண்டுவருமாக இருந்தால் அது ஏற்றுக்கொள்ளதக்க ஒன்று.
இல்லை என்றால் ரணிலின் சுய அரசியல் நோக்கத்திற்கான காய் நகர்த்தல்களின் பட்டியலில் இதுவும் ஒன்று...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
