தேசபந்துவை விசாரிக்க தயாராகும் புலனாய்வுக் குழு
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் கடுமையான அதிகார துஷ்பிரயோகம் குறித்து விசாரித்து அறிக்கை அளிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவிற்கு உதவ ஒரு புலனாய்வுக் குழு பெயரிடப்பட்டுள்ளது.
தேசபந்து தென்னகோன் தொடர்பில் நியமிக்கப்பட்ட விசாரணை குழு நாடாளுமன்றில் மூன்றாவது முறையாக கூடியபோது குறித்த புலனாய்வு குழு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
குறித்த குழுவானது விசாரணை தொடர்பில் கலந்துரையாட நாடாளுமன்றில் கூடியதாக தென்னிலைங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
விசாரணைக் குழு
விசாரணைக் குழுவிற்கு உதவுவதற்காக ஒரு பொலிஸ் புலனாய்வுக் குழுவை பரிந்துரைத்து அனுப்புமாறு பதில் பொலிஸ்மா அதிபரிடம் குழு விடுத்த கோரிக்கையின் பேரில், குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நியமிக்கப்பட்ட இந்த புலனாய்வு விசாரணைக் குழுவின் உதவியுடன் மேலும் விசாரணைகளைத் தொடங்க முடிவு செய்துள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 16 மணி நேரம் முன்

சுந்தர் பிச்சையின் புதிய சம்பள விபரம் வெளியானது... பாதுகாப்பிற்கு மட்டும் இத்தனை கோடிகளா? News Lankasri

Post Office Special திட்டத்தில் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்தால்.., 5 ஆண்டுகளில் வட்டி மட்டுமே லட்சக்கணக்கில் News Lankasri
