எரிவாயு சிலிண்டர் வெடித்து உயிரிழந்த பெண்ணின் மரணத்தில் சர்ச்சை
பொலநறுவையில் சமையல் எரிவாயு வெடித்தத்தில் பெண்ணொருவர் உயிரிழந்தாக வெளியான செய்திகள் உண்மையில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெலிகந்த பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்ட தீயினால் எரியுண்டு 19 வயதுடைய, திருமணமான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
கணவனுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளான குறித்த பெண், வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கும், அங்கிருந்து பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற போது, மருதானை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதன்போது அளித்த வாக்குமூலத்தில், தனது கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்ததாக தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் 19 வயதான ஆயிஷா குமுதுனி எனும் பெண் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புபட்ட செய்தி
இலங்கையில் சமையல் எரிவாயு வெடிப்பினால் யுவதி பலி
