இலஞ்சம் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் நியமனம் குறித்து வலுக்கும் சர்ச்சை
இலஞ்சம் ஒழிப்பு ஆணைக்குழுவின் (CIABOC) பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்கவின் நியமனம் குறித்து ஐக்கிய மக்கள் சக்தி (SJB) அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் விரிவாகக் கேள்வி எழுப்பவுள்ளது.
கடந்த காலத்தில், ரங்க திசாநாயக்கவின் நியமனத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா ஆகியோர் அங்கம் வகிக்கும் அரசியலமைப்பு பேரவையே அனுமதி அளித்தது என கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி கூறியிருந்தார்.
சட்டப் பிரிவில் பணியாற்றியதாக
இந்தக் கூற்றைக் கருத்திற்கொண்டு, குறித்த நியமனம் தொடர்பான தமது நிலைப்பாட்டையும், உண்மைகளையும் நாடாளுமன்றத்தில் முன்வைக்க ஐக்கிய மக்கள் சக்தி எதிர்பார்ப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ரங்க திசாநாயக்க முன்னதாக மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) சட்டப் பிரிவில் பணியாற்றியதாக அதன் முன்னாள் சிரேஷ்ட தலைவர் நந்தன குணதிலக சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த கருத்து தொடர்பாகவும் சமூகத்தில் சர்ச்சை நிலவுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri