தமிழரசுக் கட்சியின் கூட்டத்திற்கு வந்த கொழும்பு பெண்ணால் ஏற்பட்ட பெரும் சர்ச்சை
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவிற்கான வாக்கெடுப்பை நடத்த ஆயத்தப்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் மட்டக்களப்பிலிருந்து வந்த தாம் வெளியில் நிற்பதாக மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அணி பொருளாளர் மற்றும் செயலாளர் உள்ளிட்ட குழுவினர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
எனினும் தமிழரசுக் கட்சியின் எந்தக் கிளையிலும் உறுப்புரிமை இல்லாத கொழும்பிலிருந்து வந்த பெண் வாக்கெடுப்பு இடம்பெற்ற மண்டபத்திற்குள் இருப்பதாகவும் அவர்கள் குற்றச்சாட்டு முன்வைத்திருந்தனர்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்யும் தேர்தல் இன்று (21) திருகோணமலையில் இடம்பெற்றிருந்தது.
இதற்கான வாக்கெடுப்பு பத்து மணிக்கு ஆரம்பிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் 11 மணியளவிலேயே வாக்கெடுப்பு ஆரம்பமாகியிருந்தது.
குறித்த கொழும்பு பெண் மண்டபத்திற்குள் இருப்பதாக தெரிவித்து உருவாகிய சர்ச்சை நிலைமையை அடுத்தே இவ்வாறு வாக்கெடுப்பு பணிகள் தாமதமடைந்திருந்ததாக தெரியவருகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |