சா்ச்சைக்குாிய அமெரிக்க உடன்பாட்டை, நாடாளுமன்றில் சமா்ப்பிக்கிறது அரசாங்கம்
அமெரிக்காவின் நியூ போற்றீஸ் எனா்ஜி( New Fortress energy ) நிறுவனத்துடன் இலங்கை அரசாங்கம், செய்து கொண்ட உடன்படிக்கை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அரசாங்கம் கூறியுள்ளது.
இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே தினேஷ் குணவர்தன இந்த உறுதிமொழியை வழங்கினார்.
இந்த உடன்படிக்கை தொடர்பில், ஐக்கிய தேசியக் கட்சி எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை.
முதலில் இந்த உடன்படிக்கையை ஆராய்ந்து பின்னர் ஒரு நிலைப்பாட்டை எடுக்கவே அது விரும்புகிறது என்று அவா் குறிப்பிட்டாா்.
எனவே அந்த ஆவணத்தை நாடாளுமன்றத்தில் முன்வைக்குமாறு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.
உடன்படிக்கையின் ஒரு அம்சமாக , அமெரிக்காவின் நியூ போற்றீஸ் எனா்ஜி நிறுவனம், ( New Fortress energy ) கெரவலப்பிட்டிய மின் வளாகத்திற்கு எரிவாயு விநியோக உரிமையைப் பெற்றுள்ளது.
இந்த உடன்படிக்கையின்படி நியூ போற்றீஸ் எனா்ஜி ( New Fortress energy ) 40% உரிமைப் பங்கைப் பெற்றுள்ளது.
அத்துடன் கொழும்பின் கடற்கரையில் அமைந்துள்ள கடலோர திரவ இயற்கை எரிவாயு முனையத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
இதேவேளை புதிய அனல்மின் நிலையங்கள் செயல்படத் தொடங்கும் அமரிக்க நிறுவனம், 1.2 மில்லியன் எாிவாயுக் கலன்களை இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கவுள்ளது.
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri