மானிப்பாயில் சர்ச்சைக்குரிய கட்டுமான விவகாரம் - ரஜீவன் எம்.பி ஆளுநருக்கு கடிதம்

Jaffna Parliament of Sri Lanka Sri Lanka Government
By Kajinthan Apr 26, 2026 09:48 AM GMT
Report

யாழ்ப்பாணம் - மானிப்பாய் பிரதேச சபைக்குட்பட்ட ஜே/139 கிராம சேவகர் பிரிவில் இரண்டு மாடி கட்டடம் ஒன்று அமைக்கப்பட்டு வரும் நிலையில் குறித்த கட்டடமானது முறையற்ற வகையில், ஆளுநரின் உத்தரவையும் மீறி கட்டப்பட்டு வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி வடக்கு மாகாண ஆளுநருக்கு அவசர கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது,

பகல் நேரத்தில் அவதானமாக செயற்படவும்..! பல பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பகல் நேரத்தில் அவதானமாக செயற்படவும்..! பல பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

முறையற்ற கட்டட நிர்மாணம்

மானிப்பாய் பிரதேச சபையில் இடம்பெறும் முறையற்ற கட்டட நிர்மாணம் தொடர்பான அவசர தலையீடு கோரிக்கை

யாழ்ப்பாணம் மானிப்பாய் பிரதேச சபைக்குட்பட்ட ஜே/139 கிராம சேவகர் பிரிவில், முறையற்ற வகையில் அனுமதி வழங்கப்பட்டு இரண்டு மாடி கட்டடம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருவது தொடர்பாக மக்களிடமிருந்து கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மானிப்பாயில் சர்ச்சைக்குரிய கட்டுமான விவகாரம் - ரஜீவன் எம்.பி ஆளுநருக்கு கடிதம் | Controversial Construction Issue Manipay

இக்கட்டடம் சம்பந்தமாக பாதிக்கப்பட்ட தரப்பினரால் பல முறை வலிகாமம் தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேச சபை, உள்ளூராட்சி திணைக்களம் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றிற்கு முறையீடுகள் செய்யப்பட்டுள்ள போதிலும், எந்த உரிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விடயம் தொடர்பில் தங்களது தலைமையிலான ஆளுநர் அலுவலகம் கடந்த நவம்பர் மாதம் எழுத்துமூலம் கட்டட நிர்மாணப் பணிகளை இடைநிறுத்துமாறு உத்தரவிட்டிருந்த நிலையிலும், தற்போது அந்த உத்தரவை மீறி மீண்டும் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன என்பது மிகுந்த கவலைக்குரிய விடயமாகும்.

இதனை விட அதிகமாக கவலைக்குரியது, பிரதேச சபையினரே மீண்டும் அனுமதி வழங்கியதாக கூறப்படுவது, பாதிக்கப்பட்ட மக்களிடம் “நீதிமன்றம் செல்லுங்கள்” என பொறுப்பற்ற பதில் வழங்கப்படுவது, மக்களின் காணி எல்லைகள் மீறப்படுவது, பயன்தரும் மரங்கள் அச்சுறுத்தலின் கீழ் வெட்டப்படச் செய்யப்படுவது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்பட்ட தகவல்களும் வழங்கப்படாதது போன்ற விடயங்களாகும்.

இடைநிறுத்த உத்தரவு

மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்கள் கடமைகளை முறையாக நிறைவேற்றாததுடன், சிலர் பொறுப்பற்ற வகையில் செயல்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இது நல்லாட்சிக்கும் சட்ட ஆட்சிக்கும் எதிரான ஒரு ஆபத்தான முன்னுதாரணமாகும்.

எனவே, தாங்கள் வழங்கிய இடைநிறுத்த உத்தரவை உடனடியாக நடைமுறைபடுத்துதல், குறித்த கட்டட நிர்மாணத்தின் சட்டபூர்வ நிலையை விசாரணைக்கு உட்படுத்துதல், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து சுயாதீன விசாரணை நடத்துதல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்குதல் என தங்களது அவசர தலையீட்டை கோருகின்றேன்.

இவ்விடயம் தொடர்ந்தும் அலட்சியப்படுத்தப்பட்டால், பொதுமக்களின் அரசியல் மற்றும் நிர்வாக அமைப்புகளின் மீது உள்ள நம்பிக்கை கடுமையாக பாதிக்கப்படும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தின் பிரதியானது வடக்கு மாகாண உள்ளூராட்சி அதிகார சபைக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.

இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! 12 பேர் வைத்தியசாலையில் அனுமதி - ஆபத்தான நிலையில் ஒருவர்

இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! 12 பேர் வைத்தியசாலையில் அனுமதி - ஆபத்தான நிலையில் ஒருவர்

நடுக்கடலில் தீவிரமடையும் பதற்றம்! ஈரானிய நிழற்கப்பற்படையை வழிமறித்த அமெரிக்க உலங்கு வானூர்திகள்

நடுக்கடலில் தீவிரமடையும் பதற்றம்! ஈரானிய நிழற்கப்பற்படையை வழிமறித்த அமெரிக்க உலங்கு வானூர்திகள்

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், சாம்பல்தீவு

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் மேற்கு, Jaffna, கோண்டாவில் மேற்கு

24 Apr, 2026
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

26 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, திருச்சி, India

25 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்

நவாலி, சுண்டுக்குழி

24 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US