கல்முனையில் மாட்டிறைச்சியின் கட்டுப்பாட்டு விலை தொடர்பில் வெளியான தகவல் (photos)
கல்முனை மாநகர சபை எல்லையினுள் புனித ரமழான் நோன்பு காலத்தை முன்னிட்டு, மாட்டிறைச்சியை கட்டுப்பாட்டு விலையில் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் நேற்று (03.04.2023) இறைச்சிக் கடை உரிமையாளர்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின்போது இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்று (04.04.2023) தொடக்கம் ஒரு கிலோ கிராம் தனி இறைச்சியை 2000 ரூபாவுக்கும் 200 கிராம் முள் சேர்க்கப்பட்ட ஒரு கிலோ கிராம் இறைச்சியை 1800 ரூபாவுக்கும் விற்பனை செய்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாட்டிறைச்சியை கட்டுப்பாட்டு விலை குறித்த விலைப்பட்டியல்
அத்துடன் இவ்விலைப்பட்டியலை அனைத்து இறைச்சிக் கடைகளிலும் காட்சிப்படுத்தும் பொருட்டு குறித்த விலைப்பட்டியல் ஆணையாளரினால் இறைச்சிக் கடைகளின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன.
இக்கலந்துரையாடலில் பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.அஸீம், கணக்காளர் கே.எம்.றியாஸ், பொறியியலாளர் ஏ.ஜே.ஹலீம் ஜௌஸி, கால்நடை வைத்திய அதிகாரி என்.ஏ.வட்டபொல, வருமான வரி பரிசோதகர்களான ஏ.ஜே.சமீம், எம்.சலீம், எம்.எஸ்.எம்.உபைத், எம்.ரி.சப்னம் சாஜிதா மற்றும் எல்.எம்.சாதிக் உள்ளிட்ட உத்தியோகத்தர்களும் பங்கேற்றிருந்தனர்.


விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan
10 நாட்களாக வலியில் துடித்துள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam