இராணுவம் அலைபேசி பயன்படுத்துவது தொடர்பில் கட்டுப்பாடு!
இராணுவத்தினர் அலைபேசி பயன்படுத்துவது தொடர்பில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இராணுவத்தினர் அலைபேசி மற்றும் ஸ்மார்ட் பேசிகள் பயன்படுத்தும் போது சில புதிய கட்டுப்பாடுகளை இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.
இராணுவப்படையினரின் அலைபேசிகள் மற்றும் ஸ்மார்ட் பேசிகளில் உரையாடல்களை பதிவு செய்யும் வசதி காணப்படுகின்றது. எனினும் தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்யக்கூடாது என இராணுவத் தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.
எந்தவொரு படைவிரரேனும் இந்த உத்தரவினை பின்பற்றத் தவறினால் அதற்கான முழுப் பொறுப்பினையும் நிறுவனத் தலைவர் ஏற்றுக்கொள்ள வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
உரையாடல்களை பதிவு செய்வதனால் இராணுவ இரகசியங்கள் வெளியே கசியும் என்ற காரணத்தினால் இவ்வாறான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்படுவது தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.