பொதுஜன பெரமுனவை உருவாக்க விமல் வீரவங்ச பங்களிப்பை வழங்கவில்லை - சாகர காரியவசம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை உருவாக்க விமல் வீரவங்ச குறைந்தளவான பங்களிப்பை கூட வழங்கியதில்லை என பொறுப்புடன் கூறுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் தாமரை மொட்டுச் சின்னம் மாத்திரமின்றி கட்சியை உருவாக்கியமை என்பன வீரவங்சவின் யோசனை என இணையத்தளம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அது முற்றிலும் பொய்யானது எனவும் அவர் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை உருவாக்க இரண்டு பேரே முன்னின்று செயற்பட்டனர். மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோரே அந்த இருவர். இது குறித்து தொடர்ந்தும் பேச விரும்பவில்லை. பொதுஜன பெரமுனவை உருவாக்கும் போது அதனை எதிர்த்தவர்களும் இருக்கின்றனர் எனவும் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.



