சட்டமா அதிபரிடம் கடிதம் ஒன்றை கையளித்த ஐ.மக்கள் சக்தி உறுப்பினர்
நாட்டின் தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த நாளில் இருந்து இதுவரை நடத்திய வழக்கு விசாரணைகளின் தகவல்களை கோரி, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், சட்டமா அதிபரிடம் இன்று கடிதம் ஒன்றை கையளித்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான் (Mujibur Rahman), ஜே.சி. அலவத்துவல (J.C.Alaththuva), ஹர்சன ராஜகருண (Harshana Rajakaruna), காவிந்த ஜெயவர்தன (Kavinda Jayawardena) உள்ளிட்டோர் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு சென்று, சட்டமா அதிபரிடம் கடிதத்தை கையளித்து, இந்த கேரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த காலத்தில் அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய அதிகாரிகளுக்கு எதிராக தொடரப்பட்ட ஊழல், வழக்குகள் உட்பட பல முக்கிய வழக்குகளை சட்டமா அதிபர் திணைக்களம் திரும்ப பெற்றுக்கொண்டது.
சிறிய தொழிற்நுட்ப பிரச்சினைகள் காரணமாக இந்த வழக்குகள் திரும்ப பெறப்பட்டுள்ளன.
இவ்வாறான சூழ்நிலையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த நாளில் இருந்து இதுவரை நடத்தப்பட்ட வழக்கு விசாரணைகள் சம்பந்தமான தகவல்களை, சட்டமா அதிபரிடம் கோரியுள்ளனர்.