எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் இயக்குனர்களுடன் மேற்கொள்ளபட்ட ஒப்பந்தம்
எக்ஸ்பிரஸ் பேர்ல் (X-Press Feeders) என்ற கொள்கலன் கப்பலின் இயக்குனர்கள் இலங்கையின் மேற்குக் கரையோரத்தில் ஏற்பட்ட இடிபாடுகளை அகற்றுவதற்காக ஷாங்காய் சால்வேஜ் நிறுவனத்துடன் (SCC) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
அத்துடன், கப்பலில் ஏற்பட்ட தீ மற்றும் அதைத் தொடர்ந்து மூழ்கும் போது கப்பலில் இருந்த கொள்கலன்கள் மற்றும் குப்பைகளை மீட்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட சைட் ஸ்கேன் சோனார் ( side-scan sonar ) மூலம் குப்பைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அத்துடன், தற்போது கொழும்பில் உள்ள ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ள எஞ்சிய எட்டு பணியாளர்களை திருப்பி நாட்டுக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இலங்கை அதிகாரிகள் தங்களது இரண்டாவது இழப்பீட்டு கோரிக்கையை கப்பல் உரிமையாளரிடம் சமர்ப்பித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
பலமான ஒரு அரசின் நேரடி ஆதரவின்றி, தேசிய இன விடுதலை சாத்தியமற்றது! 19 மணி நேரம் முன்
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam
அப்பாவின் கார்பன் காப்பி... ஜாய் கிறிஸில்டாவின் புதிய பதிவு! சிக்கப்போகும் மாதம்பட்டி ரங்கராஜ் Manithan