ஊரடங்கையும் மீறி தொடரும் போராட்டங்கள்: எல்லைமீறும் வன்முறைகள் - செய்திகளின் தொகுப்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பான நிலையை கட்டுக்குள் கொண்டுவர ஊரடங்குச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதிலும் அதனை பொருட்படுத்தாத போராட்டக்காரர்கள் தொடர்ந்தும் தமது போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இன்று காலை 07 மணிவரை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச்சட்டம் நாளை வியாழக்கிழமை காலை 07 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அரசுக்கெதிராக பாரிய போராட்டங்கள் மற்றும் வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதன் தொடர்ச்சியாக அங்கொடை பகுதியில் காவல்துறையின் பேருந்து மீது தீவைக்க முயன்ற சந்தர்ப்பத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய காலைநேர செய்திகளின் தொகுப்பு,