கேப்பாபுலவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தொடரும் போராட்டம்
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் உள்ளிட்ட செயற்பாட்டாளர்கள் முல்லைத்தீவு, கேப்பாபுலவு தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் இருந்து தொடர்ச்சியாக கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றார்கள்.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் உள்ளிட்ட செயற்பாட்டாளர்கள் கடந்த 8 ஆம் திகதி கொழும்பில் நடத்திய ஆர்ப்பாட்த்தின் போது கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டு கேப்பாபிலவில் உள்ள தனிமைப்படுத்தல் கண்காணிப்ப நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையிலயே ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் உள்ளிட்ட செயற்பாட்டாளர்கள் கேப்பாபுலவு தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
இந்த அரசு தனிமைப்படுத்தப்பட்டுள்ள தங்களை விடுவிக்காவிடின் இதனிலும் விட பாரிய செயற்பாட்டிற்கு போகவுள்ளதாகவும் இந்த அரசு சுகாதார வழிமுறைகளை காரணம் காட்டி மக்களின் போராட்டங்களை நசுக்குகின்றது.
இந்த செயற்பாட்டை உடன் நிறுத்த வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.













தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

சீனா மீது திரும்பிய ட்ரம்பின் கோபம்... ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ரத்தாகும் என மிரட்டல் News Lankasri

சற்றுமுன் பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆன போட்டியாளர்! முதல் வாரத்திலேயே அதிர்ச்சி Cineulagam
