உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 64 பேருக்கும் தொடர்ந்தும் விளக்கமறியல்
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி, சியோன் தேவாலய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உள்ளிட்ட 64 பேரையும் எதிர்வரும் 16ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான் காணொளி மூலமாக இன்று உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 21.4.2019 உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் சஹ்ரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும், ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா போன்ற இடங்களுக்குப் பயிற்சிக்காகச் சென்றவர்கள் என்ற காரணத்தாலும் காத்தான்குடியை சேர்ந்த 65 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதேவேளை சஹ்ரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர் உட்பட 4 பேரை மட்டக்களப்பு பொலிஸார் கைது செய்தனர். இந்த நிலையில் இரு வெவ்வேறு வழக்குகளைக் கொண்ட 69 பேர் பேர் தொடர்ந்து விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 5 பேர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து 64 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த 64 பேரும் நாட்டிலுள்ள பொலன்னறுவை, அநுராதபுரம், கேகாலை, திருகோணமலை போன்ற சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இவர்களை தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு காரணமாக நீதிமன்றிற்கு அழைத்துவர முடியாததையடுத்து காணொளி மூலமாக, எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 1 மணி நேரம் முன்
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
பாக்கியராஜ் மறைவு... தனது ஆயுளில் 10 ஆண்டுகளை கொடுக்க ஆசைப்பட்ட சாந்தனு! கலங்க வைக்கும் காணொளி Manithan