தொடரும் பசிலின் அடாவடித்தனம் - தென்னிலங்கை அரசியலில் பெரும் குழப்பம்
சமகால அரசாங்கத்தில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் மோசமான செயற்பாடுகள் காரணமாக அமைச்சர்கள் பலர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பசிலின் கோபத்திற்கு உள்ளான அமைச்சரவை அமைச்சர் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் இணைந்து சுயாதீனமாக செயற்படத் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் பதவியில் இருந்து விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில நீக்கப்பட்டதன் பின்னர் அமைச்சரவை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தாமாக முன்வந்து அமைச்சுப் பதவியை விட்டு விலகினார்.
இவ்வாறான சூழலில், மற்றுமொரு அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் இணைந்து சுயாதீனமாக செயற்படுவதற்கு எடுத்த தீர்மானம், அரசாங்கத்தின் உள்ளக மோதலின் தீவிரத்தை காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பசில் ராஜபக்ஷவிற்கும் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கும் இடையில் தற்போது கருத்து முரண்பாடுகள் அதிகரித்து வருவதாக உள்ளக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்றத்தில் பசில் ராஜபக்ஷவின் மேலாதிக்கம் மற்றும் அவருக்குப் பிடிக்காத நபர்கள் மீதான தாக்குதல்கள் காரணமாக அரசாங்கத்தின் உள்ளக நெருக்கடி மீண்டும் வெடிக்கும் தருவாயில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.