அம்பாறையில் தொடரும் குரங்குகளின் தொல்லை: பொதுமக்கள் விசனம்

Ampara Sri Lanka Sri Lankan Peoples
By Farook Sihan Feb 27, 2024 12:34 PM GMT
Farook Sihan

Farook Sihan

in சமூகம்
Report

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் குரங்குகளின் தொல்லையால் நகர வர்த்தகர்கள், விவசாயிகள் மற்றும் பாதசாரிகள் பெரும் சிரமங்களை தினம்தோறும் எதிர்கொண்டு வருவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

தினமும் கொத்தணியாக 300 இற்கும் மேற்பட்ட குரங்குகள் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடமாடி வருவதுடன், இவ்வாறு அதிகரித்து வருகின்ற குரங்குகளின் தொல்லையை கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் பொதுமக்களினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியில் விபத்து: இருவர் படுகாயம்

மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியில் விபத்து: இருவர் படுகாயம்

குரங்குகளின் தொல்லை

இம்மாவட்டத்தில் சவளக்கடை, நாவிதன்வெளி, நற்பிட்டிமுனை, மருதமுனை, சேனைக்குடியிருப்பு, மணல்சேனை, பாண்டிருப்பு, பெரியநீலாவணை, மத்தியமுகாம், சொறிக்கல்முனை, சம்மாந்துறை, நிந்தவூர், அட்டாளைச்சேனை, அட்டப்பளம், ஒலுவில், வளத்தாபிட்டி, அக்கரைப்பற்று, தம்பிலுவில், பொத்துவில், இறக்காமம் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் விதைப்பு மேற்கொள்ளப்பட்ட நெற்களை சேதப்படுத்தி வியாபார கடைகளில் காட்சிப்படுத்தபட்டுள்ள பொருட்களை நாசப்படுத்தி விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பழங்களை உண்டு வீணாக்குவதாகவும் குற்றச்சாட்டுக்கள் அடுக்கடுக்காக முன்வைக்கப்படுகின்றன.

அம்பாறையில் தொடரும் குரங்குகளின் தொல்லை: பொதுமக்கள் விசனம் | Continued Monkey Infestation In Ampara

இது தவிர இந்த மாவட்டத்தில் வீதிகளில் வாகனங்களின் போக்குவரத்தினை குரங்கு கூட்டங்கள் வீதியின் நடுவில் சஞ்சாரம் செய்து தடுத்து வருகின்றன. இதனால் பல விபத்துக்களும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இப்பிரதேச மக்கள் பொருட்களை எடுத்து செல்லும் போது கைகளில் உள்ள உணவு பொதிகளை பிடுங்குவதாகவும் இதன் காரணமாக இப்பகுதி மக்கள் பல இடர்களை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

பொதுமக்கள் பாதிப்பு

இதேவேளை குரங்குகளின் அட்டகாசத்தால் பல பகுதிகளில் மாணவர்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் கல்விகளை தொடர்ந்து வருகின்றனர்.

அம்பாறையில் தொடரும் குரங்குகளின் தொல்லை: பொதுமக்கள் விசனம் | Continued Monkey Infestation In Ampara

அத்துடன் வீடுகளில் உடைகளை வெளியில் உலரவிடும் சந்தர்ப்பத்தில் குரங்குகள் அவற்றை கொண்டுசெல்வதால் பாடசாலை மாணவர்கள் உட்பட வீட்டில் உள்ள பெரியவர்களும் பல பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக கூறப்படுகின்றது.

அம்பாறை மாவட்டத்தின் உகண தமன பொலிஸ் பிரிவுகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் மற்றும் பேருந்துகளில் ஏறி குரங்குகள் அட்டகாசம் செய்வதனால் சாரதிகள் மற்றும் பயணிகளும் சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அம்பாறையில் தொடரும் குரங்குகளின் தொல்லை: பொதுமக்கள் விசனம் | Continued Monkey Infestation In Ampara

அத்துடன் இம்மாவட்டத்தில் குரங்குகளின் தொடர் அட்டகாசத்தால் பொறுமை இழந்த பல விவசாயிகள் விவசாயத்தை கைவிட்ட சந்தர்ப்பமும் உள்ளாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும் ஒவ்வொரு வருடமும் நேரடியாகவும் மறைமுகமாகவும் மில்லியன் கணக்கான ரூபாய் குரங்குகளினால் வீணாவதுடன் பல விவசாய நிலங்கள் குரங்குகளின் நடமாட்டம் தொல்லை காரணமாக தரிசாக மாறியுள்ளது.

@tamilwinnews அம்பாறையில் தொடரும் குரங்குகளின் தொல்லை: பொதுமக்கள் பெரும் சிரமம் #Lankasrinews #Tamiwinnews #Srilanka #Ambara #Monkey ♬ original sound - தமிழ்வின் செய்திகள்

மக்களது கோரிக்கை

இங்கு குரங்குகள் விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை உண்பதுடன் அதை முழுவதுமாக வீணாக்குவதும் இதற்கு பிரதான காரணம் என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அம்பாறையில் தொடரும் குரங்குகளின் தொல்லை: பொதுமக்கள் விசனம் | Continued Monkey Infestation In Ampara

அதுமாத்திரமன்றி நகரங்களில் முறையாக அகற்றப்படாத திண்மக்கழிவுகளை உண்டு அதிக எண்ணிக்கையில் குரங்குகள் பெருகி வருவதுடன் இதனால் விவசாய நிலத்தை பாதுகாப்பது சிரமமாக உள்ளதால் சில விவசாயிகள் விவசாய நடவடிக்கைகளை கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மக்களின் பாதுகாப்பு நலன் கருதி பொலிஸ் நிலையம் மற்றும் வன அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரொஷான் ரணசிங்க மற்றும் சன்ன ஜயசுமன யாழிற்கு விஜயம்

ரொஷான் ரணசிங்க மற்றும் சன்ன ஜயசுமன யாழிற்கு விஜயம்


பெண்ணை கொடூரமான கொலை செய்த நபரின் செயல்

பெண்ணை கொடூரமான கொலை செய்த நபரின் செயல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை வடக்கு, யாழ்ப்பாணம்

04 Sep, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, சின்னப்புதுக்குளம், இறம்பைக்குளம்

14 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
மரண அறிவித்தல்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US