கிளிநொச்சி பெரியகுளம் பகுதியில் தொடர்ச்சியான சட்டவிரோத மணல் அகழ்வு
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
சுமார் மூன்று வருடங்களுக்கு மேலாக இவ்வாறு சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாகவும், இதனால் வீதிகள், விவசாய நிலங்கள் என்பன பாதிப்புக்குள்ளாகியுள்ளது எனவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடும் கனரக வாகனங்களின் அதிகரித்த
பயன்பாட்டினால் வீதிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொது
மக்கள் அவசர தேவைகளின் பொருட்டு பயன்படுத்துவதில் சிரமங்களை எதிர்கொண்டு
வருகின்றனர்.
அன்மையில் தீடிரென கடும் நோய்வாய்ப்பட்ட முதியவர் ஒருவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்கு அவசர நோயாளர் காவு வண்டிக்கு அழைப்பு விடுத்து, நோயாளர் காவு வண்டியும் பெரியகுளம் பிரதேசத்திற்குச் சென்ற போதும் குறித்த பகுதிக்கு வீதியின் மோசமான நிலைமை காரணமாகச் செல்ல முடியாது நிலையில் உறவினர்களால் குறித்த முதியவர் நோயாளர் காவு வண்டி இருக்கும் இடம் நோக்கித் தூக்கி வரப்பட்ட போது அவர் இடையில் மரணமடைந்த சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
எனவே தங்கள் பிரதேசத்தில் இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் அகழ்வினை
தடுத்து நிறுத்த அதிகாரிகள், பொலிஸார் உள்ளிட்டவர்கள் உடனடி நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.











தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan
