கிளிநொச்சியில் குடிநீர் பெற்றுக் கொள்வதில் பெரும் நெருக்கடி
கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் வாழும் மக்கள் தமக்கான குடிநீரைப் பெற்றுக் கொள்வதில் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.
கரைச்சி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட அக்கராயன், ஐயனார் குடியிருப்பு, கெங்காதரன் குடியிருப்பு, இன்மாஸ் நகர் கோனாவில் ஆகிய கிராமங்களில் நிலவும் வறட்சி காரணமாக குடிநீர் பெற்றுக் கொள்வதில் மக்கள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
குடிநீர் நெருக்கடி
இதனை விட வருடம் முழுவதும் குடிநீர் நெருக்கடிகளை எதிர் கொள்ளும் பிரதேசமாக பூனகரி பிரதேசம் காணப்படுவதுடன் பத்திற்கும் அதிகமான கிராம அலுவலர் பிரிவுகளில் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவி வருகின்றன.
குறிப்பாக கால் நடைகள் கூட நீர் தேடி அலையும் நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



