மன்னாரில் இடம்பெறும் சமுதாய சீர்கேடுகள்: நகர சபைக்கு பறந்த கடிதம் (Photos)
மன்னார் நகர பேருந்து நிலையத்தின் மேல் மாடி கட்டிட தொகுதியில் தொடர்ச்சியாக இடம்பெறும் சமுதாய சீர்கேடுகள் தொடர்பாக உரிய அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கவில்லை என மன்னார் மாவட்ட பேருந்து உரிமையாளர் சங்கம் விசனம் தெரிவித்துள்ளது.
இவ்விடயம் குறித்து மன்னார் மாவட்ட பேருந்து உரிமையாளர் சங்கம் இன்று (21.07.2023) மன்னார் நகர சபையின் செயலாளருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
மேலும் இந்த விடயம் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மன்னார் நகர பேருந்து நிலையத்தின் மேல்மாடி கட்டிடத் தொகுதியில் பாடசாலை மாணவர்கள், ஏனையவர்கள் பாலியல் நடவடிக்கைகளிலும், மது போதையை தூண்டும் வகையிலும் செயற்படுகின்றனர்.
உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
கடந்த காலத்தில் குறித்த பேருந்து நிலையத்தில் கடமைக்காக பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டமையினால் இவ்வாறான சம்பங்கள் இல்லாது காணப்பட்டது.

ஆனால் தற்போது பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் அவ்விடத்தில் மிகவும் மோசமாக நடந்து கொள்ளுகிறார்கள்.
எனவே இவ்விடத்தில் உரிய அதிகாரிகள் தலையிட்டு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு சமுதாய சீர்கேட்டை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த கடிதத்தில் மன்னார் நீதிமன்ற பதிவாளர், மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மற்றும் தள்ளாடி 53 வது படைப் பிரிவு அதிகாரி ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri