ரஞ்சனுக்கு எதிரான இரண்டாவது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒத்திவைப்பு!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இலத்திரனியல் ஊடகமொன்றுக்கு வழங்கிய கருத்துக்களில் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் சட்டமா அதிபர் ராமநாயக்கவிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு வெள்ளிக்கிழமை (3) நீதிபதிகள் எஸ்.துரைராஜா, எச்.எம்.டி.நவாஸ் மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டத் திட்டத்தைப் பின்பற்றி வரும் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு பாடநெறிகளை இணையத்தில் அணுகுவதற்கு அனுமதியளிக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொட நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.
அந்த கோரிக்கையை சிறைச்சாலை அதிகாரிகளிடம் முன்வைக்குமாறும், அனுமதி வழங்கப்படுமாயின் நீதிமன்றத்திற்கு மோஷன் மூலம் அறிவிக்குமாறும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 2 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri
